சென்செக்ஸ் 360 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 360 புள்ளிகள் (0.62 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,628 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 111 புள்ளிகள் (0.65 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 16,988 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 562.94 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,426.96 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 140.55 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,959.50 ஆக இருந்தது.

உலக அளவில் வங்களின் சந்தித்துவரும் நெருக்கடி, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் அடுத்த வட்டி விகித உயர்வு குறித்த அச்சம், உள்ளூர் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் திரும்ப பெறப்படுவது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன. இன்றைய நாளில் அதிகபட்சமாக சென்செக்ஸ் 57,085 ஆகவும், நிஃப்டி 16,828 ஆகவும் இறங்கி காணப்பட்டது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 360.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,628.95 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 111.65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,988.40ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்,டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்