ரூ.4,445 கோடி முதலீட்டில் தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் - பிரதமர் மோடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடாக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ரூ.4,445 கோடி மதிப்பில் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் இந்த மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடாக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த மெகா ஜவுளிப் பூங்காக்கள் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘உலகுக்கு ஏற்றுமதி செய்வோம்’ என்ற இலக்குக்கு சிறந்த உதாரணங்களாகத் திகழும்.

பண்ணையில் இருந்து நூல் இழை, அது தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆடை வடிமைப்பு, தயாரிக்கப்பட்ட ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்ற செயல்பாட்டின் அடிப்படையில் ஜவுளித்துறையை இந்தப் பூங்காக்கள் வலுப்படுத்தும். இந்த ஜவுளிப் பூங்காக்கள், ஜவுளித் துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதுடன் கோடிக்கணக் கான முதலீடுகளை ஈர்த்துலட்சக்கணக்கான வேலைவாய்ப்பு களை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஊக்கத் தொகையுடன் இணைந்த உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையை மேம்படுத் தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சென்ற ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையில் இந்தத் திட்டத்தில் பங்கேற்க 67 விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வந்தன. அதில், 64 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதில் 56 விண்ணப்பங்கள் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ள நிலையில் புதிய நிறுவனம் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 ஆண்டுக்குள்..: இந்நிலையில் தற்போது ஜவுளித் துறை வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியாக 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.4,445 கோடி செலவிடப்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

வணிகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்