சென்செக்ஸ் 355 புள்ளிகள் உயர்வு 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 355 புள்ளிகள் (0.62 சதவீதம்) உயர்ந்து 57,989 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயர்ந்து 17,100 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 255.81 புள்ளிகள் உயர்வடைந்து 57,890.65 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 87.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,072.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான போக்கு காரணமாக ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. இன்றைய வர்த்தகப் போக்கில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 675 புள்ளிகள் உயர்வடைந்து 58,179 ஆகவும் இன்றைய நாளின் அதிகபட்ச வீழ்ச்சியாக 57,504 ஆகவும் சரிந்தது. இருந்த போதிலும் தகவல் தொழில்நுட்பம், வங்கி, உலோகப் பங்குகள் மீது முதலீட்டார்களுக்கு மீண்டும் ஏற்பட்ட ஆர்வம் போன்றவை இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடர்ந்து இரண்டாவது நாளில் லாபத்தில் நிறைவடைய செய்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 355.06 புள்ளிகள் உயர்வடைந்து 57,989.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114.40 புள்ளிகள் உயர்வடைந்து 17,100 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, விப்ரோ, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE