மார்ச் 13, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 13) சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.42,600 -க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்து வந்தது. கடந்த வாரத்தில் அதிரடியாக 560 வரை குறைந்திருந்தது. இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 5,325-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.42,600 -க்கு விற்பனையாகிறது. இதனால் தங்கத்தின் விலை மீண்டும் 42,000 கடந்திருக்கிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,495க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.69,500-ஆக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

11 days ago

மேலும்