மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி பகிர்வு - ரூ.1.40 லட்சம் கோடி விடுவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி பகிர்வாக ரூ.1.40 லட்சம் கோடியை மத்திய அரசு நேற்று ஒரே நாளில் விடுவித்தது. இது வழக்கத்தை விட இரண்டு மடங்காகும்.

ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. மாநிலங்களின் கரத்தை வலுப்படுத்த மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 14-வது தவணையாக தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1 லட்சத்து 40,318 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது.

வழக்கமாக மாதந்தோறும் வரி பகிர்வு ரூ.70,159 கோடியாக இருக்கும். இந்த முறை அதை விட இரண்டு மடங்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இத்தகவலை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி பகிர்வாக தமிழகத்துக்கு ரூ.5,769 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE