மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 671 புள்ளிகள் (1.12 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,135 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி176 புள்ளிகள் (0.98 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,416 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார இறுதிநாள் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. காலை 09:32 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 795.37 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,010.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 193.00 புள்ளிகள் சரிவடைந்து 17,396.60 ஆக இருந்தது.
அமெரிக்க சந்தைகளில் குறிப்பாக வங்கிப் பங்குகள் ஒரே இரவில் விற்கப்பட்டதன் விளைவு, தொடர்ந்து நீடித்துவரும் வட்டி வகித உயர்வு குறித்த அச்சம், அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகள் குறித்த கவலை போன்ற காரணங்களால் உலக சந்தைகள் தடுமாற்றத்தில் இருந்தன. இதன் எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் இரண்டாவது நாள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன. உள்ளூர் சந்தையில் நிதிப்பங்குகளின் கடுமையான வீழ்ச்சியும் சரிவுக்கு வழிவகுத்தன. இன்றைய வர்த்தக நாளின் குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 58,885 ஆகவும், நிஃப்டி 17,324 ஆகவும் இறங்கின.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 671.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,135.13 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 176.70 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,412.90 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி பங்குகள் உயர்வடைந்து இருந்தன. டாடா ஸ்டீல், விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago