மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 541 புள்ளிகள் (0.90 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,806 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி164 புள்ளிகள் (0.93 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,589 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் தட்டையாகத் தொடங்கியது. தொடர்ந்து வீழ்ச்சியில் பயணிக்கத் தொடங்கியது. காலை 09:52 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 163.73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,184.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30.30 புள்ளிகள் சரிந்து 17,724.10 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவிய மந்தமான போக்கு, வாரந்திர எஃப் அண்ட் ஓ இன்று காலாவதி, ஹெவிவெயிட் பங்குகளின் விற்பனை அழுத்தம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளின் மூன்று நாள் ஏற்றம் முடிவடைந்து இன்று பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 541.81 புள்ளிகள் உயர்வடைந்து 59,806.28 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 164.80 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,589.60 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்ந்து இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம் அண்ட் எம் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago