தெற்கு ரயில்வேயில் 11 மாதத்தில் ரூ.5,779 கோடி வருவாய்

By செய்திப்பிரிவு

சென்னை: பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில் கணிசமான வளர்ச்சியை தெற்கு ரயில்வே பதிவு செய்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் 2022-23-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் நடப்பாண்டில் பிப்ரவரி வரை 582.6மில்லியன் (52.82 கோடி) பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலமாக, ரயில்வேக்கு ரூ.5,779 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 292.65 மில்லியன் பேர் பயணம் செய்திருந்தனர்.

நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 54.3 மில்லியன் (5.4கோடி) பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலமாக, ரூ.530 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சரக்கு ரயில் போக்குவரத்து: சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வணிக மேம்பாட்டு குழு அனைத்து கோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பெருநிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை எடுத்துச் சென்றுசேர்க்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, தெற்கு ரயில்வே 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் பிப்ரவரி வரையான காலகட்டத்தில் 33.9 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 27.4 மில்லியன் டன்னாகஇருந்தது, தற்போது, இது 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், ரயில்வே வாரியத்தின் இலக்காக இருந்த 32.25 மெட்ரிக் டன்னை விட இது 5 சதவீதம் அதிகமாகும்.

சரக்கு ரயில் போக்குவரத்து மூலமாக, ரூ.3,230.46 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இக்காலகட்டத்தில் நிலக்கரி (16.058 மில்லியன் டன்), உணவு தானியங்கள் (2.769 மில்லியன் டன்), உரங்கள் (3.446 மில்லியன் டன்) ஆகியவைஎடுத்து செல்லப்பட்டன.

சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து வளர்ச்சிக்கு தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்