இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ‘பவர்-95’ பிரீமியம் பெட்ரோல் சென்னையில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘பவர்-95’ என்ற பிரீமியம் ரக பெட்ரோலை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ‘பவர்-95’ என்ற பிரீமியம் ரக பெட்ரோலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் பெட்ரோல் வாகனஇன்ஜின்களின் அதிவேக செயல்பாட்டுக்கு பயன்படுவதோடு, எரிசக்தி சேமிப்பாகவும் திகழ்கிறது. அத்துடன், வாகன இன்ஜின்கள் மென்மையான செயல்பாட்டுக்கு உதவுவதோடு, இன்ஜின்களில் படியும் கார்பன் துகள்களை அகற்றி அவற்றின் ஆயுட்காலம் அதிகரிக்கவும் பயன்படுகிறது.

மேலும், வாகன புகையைக் குறைத்து சுற்றுச்சுழல் மாசுபடுவதையும் தடுக்கிறது. சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சக்தி ஆட்டோ சர்வீஸ்பெட்ரோல் பங்க்கில் நடைபெற்ற விழாவில், பவர்-95 ரக பிரீமியம் பெட்ரோலை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் (மார்க்கெட்டிங்) அமித் கார்க் காணொலி காட்சிமூலம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தலைமைப் பொது மேலாளர் (ரீடெய்ல்) சஞ்ஜய் மாத்தூர் இந்தபெட்ரோலை முதல் வாகனத்துக்கு நிரப்பி விற்பனையைத் தொடங்கி வைத்தார். துணைப் பொது மேலாளர் என்.ராதிகா (ரீடெய்ல்), அதிகாரிகள், டீலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE