மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 501 புள்ளிகள் (0.84 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 58,909 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129 புள்ளிகள் (0.85 சதவீதம்) வீழ்ச்சிடைந்து 17,321 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கியது. பின்னர் வீழ்ச்சியடைந்தது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 306.62 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,104.46 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி62.75 புள்ளிகள் சரிவடைந்து 17,388.15 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் எதிர்மறையான போக்கு, வளர்ச்சி குறித்த கவலைகள், நீடித்த எஃப்ஐஐ வெளியேற்றம் குறித்த அச்சம், தகவல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் வாகன பங்குகளின் இழுபறி போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 501.73 புள்ளிகள் உயர்வடைந்து 58,909.35 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129.00 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,321.90 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி பங்குகள் ஏற்றம் அடைந்திருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, விப்ரோ, டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், கோடாக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், எம் அண்ட் எம் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago