மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 448 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 448 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்வடைந்து 59,411 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146 புள்ளிகள் (0.85 சதவீதம்) உயர்வடைந்து 17,450 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 09:47 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 359.83 புள்ளிகள் உயர்வடைந்து 59,321.95 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 77.80 புள்ளிகள் உயர்வடைந்து 17,381.75 ஆக இருந்தது.

இந்தியாவின் டிசம்பர் காலாண்டுக்கான ஜிடிபி 4.4 சதவீதமாக குறைந்திருந்த போதிலும், அதே காலண்டில் உற்பத்தி துறை 1.1 சதவீதமாக சுருங்கி இருந்தாலும், மூடிஸ் இன்வெஸ்ட்டார்ஸ் சர்வீஸ், 2023ம் ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சியை 408 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக உயர்த்தியது, உலகளாவிய சந்தைகளின் சாகமான போக்கு, தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் உலோக பங்குகளின் ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 8 நாட்கள் வீழ்ச்சியில் இருந்து மீண்டு இன்று ஏற்றத்தில் நிறைவடைந்தன. அனைத்து வகை பங்குகளும் லாபத்தில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 448.96 புள்ளிகள் உயர்வடைந்து 59,411.08 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 146.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,450.90 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், ஐடிசி, எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE