சென்னை: சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ம், வணிக சிலிண்டர் விலை ரூ.350.50ம் அதிகரிக்கப்படுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இனி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1118.50 காசுகள்.
அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்ந்துள்ளது. ஆட்டோக்களுக்கான எல்பிஜி விலையும் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.
» சென்செக்ஸ் 326 புள்ளிகள் வீழ்ச்சி
» வாடிக்கையாளர் டெலிவரி பெற்ற நிலையில் தீப்பற்றி எரிந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 - வீடியோ
கடைசியாக கடந்த ஜூலை 2022ல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை இன்றே அமலுக்கு வந்தது. புதிய விலைப்பட்டியலின் படி டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1103, வணிக சிலிண்டர் விலை ரூ.2119.50 என்றளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக சாமான்ய மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago