சென்செக்ஸ் 326 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 326 புள்ளிகள் (0.55 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 58,962 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88 புள்ளிகள் (0.51 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,304 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 53.62 புள்ளிகள் உயர்வடைந்து 59,341.97 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.90 புள்ளிகள் உயர்வடைந்து 17,421.60 ஆக இருந்தது.

முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து நீடித்து வரும் வட்டிவிகிதம் உயர்வு குறித்த அச்சம், இந்தியாவின் டிசம்பர் காலண்டிற்கான ஜிடிபி தரவுகளுக்காக முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தது, பார்மா மற்றும் உலோக பங்குகள் சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 8 நாளாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் நாளில் அதிகபட்சமாக 59,484 புள்ளிகளாக உயர்ந்தது. பின்னர் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து நாளின் அதிக பட்சமாக 58,796 வரை இறங்கியது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 326.23 புள்ளிகள் வீழ்ச்சிடைந்து 58,962.12 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,303.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன. எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் டாடா ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE