சென்செக்ஸ் 175 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 175 புள்ளிகள் (0.30சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,288 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73 புள்ளிகள் (0.42 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,329 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 351.11 புள்ளிகள் சரிவடைந்து 59,112.82 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 76.75 புள்ளிகள் சரிவடைந்து 17,389.05 ஆக இருந்தது.

அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் வெளியான வட்டி விகித உயர்வு குறித்த, தனிமனித நுகர்வுச் செலவு உயர்வு போன்றவை எதிர்பார்த்தத்தைவிட அதிகமாக இருந்தது, இந்திய பங்குச்சந்தைகளை இவை வெகுவாக பாதித்தன. அதேநேரத்தில், ஆட்டோமொபைல்ஸ், தகவல் தொழில்நுட்பம், உலோக பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7 நாளாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 175.58 புள்ளிகள் வீழ்ச்சிடைந்து 59,288.35 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,392.70 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, விப்ரோ, எல் அண்ட் டி, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், டாட ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE