பங்குச் சந்தையில் 6 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.30 லட்சம் கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்தியப் பங்குச் சந்தையில் தொடர் சரிவு காணப்பட்ட நிலையில், 6 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 16-ம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரையில் சென்செக்ஸ் 1855 புள்ளிகள் சரிந்தது. இது 3 சதவீத சரிவு ஆகும். இதனால், மும்பைச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.8.30 லட்சம் கோடி குறைந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்வதேச அளவில் பங்குச் சந்தை நிலையற்று காணப்பட்டது. இந்தச் சூழலில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து தங்கள் பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்தது.

அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குச் சந்தையில் அந் நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ந்துள்ளது. ரூ.11.5 லட்சம் கோடி அளவில் அதானி குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், இந்தியப் பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழல் காணப்படுவதாக ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE