தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில்,நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.41,680-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. இந்த ஆண்டு ஜன. 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஒரு பவுன் தங்கம் ரூ.42,700 முதல் ரூ.42,800-க்கு விற்பனையானது.

பின்னர் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 2-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.44,040-க்கு விற்பனையானது.

கடந்த 19-ம் தேதி ஒரு பவுன் ரூ.42,320-க்கு விற்பனையான நிலையில், 22-ம் தேதி ஒரு பவுன்ரூ.42,200-ஆக குறைந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று 3-வது நாளாக குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.5,210-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.41,680-க்கு விற்பனையானது.

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. கடந்த 23 நாட்களில் பவுனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,576-க்கு விற்பனையானது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.70-க்கு விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 mins ago

வணிகம்

16 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்