சென்செக்ஸ் 141 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 141 புள்ளிகள் (0.24 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,463 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45 புள்ளிகள் (0.26 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,465 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து லாபத்தில் விற்பனையான போதிலும் புள்ளிகள் சரியத் தொடங்கின. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 81.09 புள்ளிகள் உயர்வடைந்து 59,816.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.65 புள்ளிகள் சரிவடைந்து 17,545.35 ஆக இருந்தது.

மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகப்படுத்தலாம் என்ற அச்ச உணர்வு, பணப்புழக்கத்தின் வீழ்ச்சி, வளர்ச்சி குறித்த கவலைகள் போன்ற சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் 6 நாளாக தொடர்ந்து வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 141.87 புள்ளிகள் வீழ்ச்சிடைந்து 59,463.93 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.50 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,465.80 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஓஎன்ஜிசி, டிவிஸ் லேப்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ, பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிடு, என்டிபிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. அதானி எண்டர்பிரைசர்ஸ், ஹிண்டல்கோ, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், எஸ்பிஐ லைஃப், எல் அண்ட் டி, டாடா மோட்டர்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE