நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2016-17-ல் 7.1%: மத்திய அரசு தகவல்

By ராய்ட்டர்ஸ்

2016-17-ல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பதி (ஜிடிபி) 7.1% ஆக வளர்ச்சியடைந்துள்ளது என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் முடிந்த 2016-17 நிதியாண்டில் அதிகாரபூர்வ கணிப்புகளுக்கு இணங்க ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% ஆக வளர்ச்சியடைந்துள்ளது.

4-ம் காலாண்டு வளர்ச்சி விகிதம் 6.1% என்று கணிக்கப்பட்டுள்ளது. 203-14-க்குப் பிறகு இது மந்தமான வளர்ச்சி என்றே கூற வேண்டும். ஏனெனில் 4-வது காலாண்டில் அப்போது 6.4% வளர்ச்சி விகிதம் எட்டப்பட்டது.

உலக வங்கி வேறொரு அறிக்கையில், 2017-18 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று கணித்துள்ளதோடு, இதற்குக் காரணமாக பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள், உள்நாட்டு நுகர்வு, வணிகத்தில் முன்னேற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.

2016-17 நிதியாண்டில் 7%க்கும் மேலாக வளர்ச்சி விகிதம் காட்டிய தொழிற்துறைகள் என்று பொது நிர்வாகம், பாதுகாப்பு, மற்றும் பிற சேவைகள் என்று கூறலாம் இவை 11.3% வளர்ச்சி கண்டுள்ளன. உற்பத்தித் துறை 7.9% வளர்ச்சி விகிதத்தையும், ஹோட்டல்கள், போக்குவரத்து, கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை சார்ந்த சேவைகல் ஆகியவை 7.8% என்ற வளர்ச்சி விகிதத்தையும் எட்டியுள்ளது.

வேளாண்மைத் துறை 4.9% வளர்ச்சியடைந்துள்ளது. சுரங்கத்துறை 1.8% வளர்ச்சி கண்டுள்ளது.

பணமதிப்பு நீக்கத்தினால் கட்டுமானத்துறை பாதிப்படைந்து மார்ச் 31-ல் முடியும் நான்காம் காலாண்டில் 3.7% சரிவு கண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்