மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 81 புள்ளிகள் உயர்வடைந்து 60,773 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்வடைந்து 17,879 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 141.06 புள்ளிகள் உயர்வடைந்து 60,832.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10.65 புள்ளிகள் உயர்வடைந்து 17,855.25 ஆக இருந்தது.
ஹெவிவெயிட் பங்குகளின் உயர்வால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியிருக்கின்றன. இருந்த போதிலும் வட்டி விகித அதிகரிப்பு தொடர்ந்து நீடிக்கும் என்ற கவலையில் முதலீட்டாளர்கள் இருப்பதால் அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தின் தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். அந்த தரவுகள் வட்டி விகித உயர்வு குறித்த தகவல்கள் இடம்பெறலாம்.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர் டெல், பவர் கிர்டு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், அட்ல்டரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், விப்ரோ ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago