சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வெள்ளிக்கிழமை (பிப்.17) சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.42,000-க்கு விற்பனையாகிறது. இந்த வாரம் திங்கள் தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் தை தொடங்கியே திருமண காலம் என்பதால் திருமணத்திற்காக நகை வாங்குபவர்களுக்கு இந்த வாரம் லாபகரமாக அமைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்திருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.5,250-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,896 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.71,200-ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago