சென்னை: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த டிச.31-ம்தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.330.9 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.325.5 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் 4.8 சதவீதம் அதிகரித்து ரூ.146 கோடியாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 3-வது காலாண்டில் ரூ.31.5 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது ரூ.80.8 கோடியாக வளர்ச்சி பெற்றுள்ளது.
அதேபோல கடந்த ஆண்டில் ரூ.494.3 கோடியாக இருந்த கடன் அனுமதிகள் தற்போது 51 சதவீதம் அதிகரித்து ரூ.745 கோடியாக உள்ளது. கடன் வழங்கல் அளவும் 57 சதவீதம் உயர்ந்து ரூ.443.9 கோடியிலிருந்து ரூ.696.2 கோடியாகியுள்ளது.
ஒட்டுமொத்த கடன் புத்தகம் டிசம்பர் 2022-ன் இறுதியில் ரூ.12,196.3 கோடியாக உள்ளது. இதில் சுயதொழில் செய்பவர்களுக்கான கடன் நிலுவை 49.1 சதவீதமாகவும், சொத்துகள் மீதான கடன் நிலுவை 20.1 சதவீதமாகவும் உள்ளது.
நிறுவனத்துக்கு கடந்த டிச.31-ம் தேதி நிலவரப்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் 12 மாநிலங்களில் 160 கிளைகள் 25 சாட்டிலைட் மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago