பங்குச்சந்தை | சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்து 60,658.88 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,809.40 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 10:05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 274.38 புள்ளிகள் உயர்வடைந்து 60,706.22 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 62.00 புள்ளிகள் உயர்வடைந்து 17,832.90 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் சாதகமான சூழலின் தாக்கத்தால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்தின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன. மறுபுறம், எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE