மும்பை: மும்பை ஓர்லி பகுதியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.240கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் மிக விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பாக கருதப்படுகிறது.
மும்பை ஒர்லி பகுதியில் உள்ளஅன்னி பெசன்ட் சாலையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்று இந்த கோபுரங்கள் அழைக்கப்படு கின்றன. இதில் ஒரு கோபுரத்தின் (டவர்- பி) 63, 64, 65 ஆகிய தளங்களில் ‘பென்ட்ஹவுஸ்’ என்றுஅழைக்கப்படும் உச்சிப் பகுதி குடியிருப்பு உள்ளது.
இந்த பென்ட்ஹவுஸ்’ ரூ.240கோடிக்கு விற்பனை செய்யப்பட் டுள்ளது. வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே. கோயங்கா இதனை வாங்கியிருப்பதாக கூறப் படுகிறது. இந்த பென்ட்ஹவுஸ் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. மும்பையில் குடிசையில் வசிப்பவர்களுக்கு 300 சதுர அடியில் இலவச குடியிருப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதைவிட 100 மடங்கு பெரியதாக இந்த பென்ட்ஹவுஸ் உள்ளது. இந்த விற்பனைக்கான பத்திரப் பதிவு கடந்த புதன்கிழமை நடந்தது.
விலை உயர்ந்தது: ரியல் எஸ்டேட் தொடர்பான ஆய்வு மற்றும் தரவரிசை நிறுவனம் ஒன்றின் தலைவர் பங்கஜ் கபூர் கூறும்போது, “இந்தியாவில் இன்று வரை விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மிக விலையுயர்ந்தது இதுதான். அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் இதுபோன்ற சொகுசு குடியிருப்புகள் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago