நாட்டில் புதிதாக 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் புதிதாக 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பதில் அளித்தார். அப்போது, நாட்டில் 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக செயல்படத் தொடங்கி உள்ளன. அதேநேரத்தில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1,333 நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இவற்றில், 313 நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. 1,017 நிறுவனங்கள் அவற்றின் துணை நிறுவனங்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வது என்பது இயல்பானதுதான். அனால், ஒரு நிறுவனம் மூடப்பட்டால் பல நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அதுதான் முக்கியம். இந்தப் புதிய நிறுவனங்களால் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது என தெரிவித்தார்.

எனினும், எந்த கால இடைவெளியில் 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் புதிதாக செயல்படத் தொடங்கின என்பது குறித்தோ, எந்தக் கால இடைவெளியில் 1,333 நிறுவனங்கள் மூடப்பட்டன என்பது குறித்தோ அவர் குறிப்பிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE