அதிகபட்சமாக 24,200 டன் இரும்பு துகள்கள் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு இரும்பு துகள்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை துறைமுகம் ஜவஹர் முனையத்தில் எம்.வி.கிரேஸ் என்ற கப்பலில் ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 24,200 டன் இரும்பு துகள்கள் கையாளப்பட்டு ஏற்றப்பட்டன.

இதற்கு முன்பு, கடந்த 2016 அக்.26-ம் தேதி அதிகபட்சமாக 18,700 டன் எடையுள்ள இரும்பு துகள்கள் கையாளப்பட்டதே சாதனை அளவாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE