நிதி அறிக்கை தாக்கல் செய்யாத 1.28 லட்சம் நிறுவனங்கள் நீக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யாத 1.28 லட்சம் நிறுவனங்களை நிறுவனங்கள் பதிவேட்டிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.

போலி நிறுவனங்களை அடை யாளம் கண்டு, அவற்றை முடக்கும் நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 2 நிதி ஆண்டுகள் தொடர்ச்சியாக நிதிநிலை

அறிக்கை தாக்கல் செய்யாதநிறுவனங்களை பதிவேட்டிலி

ருந்து மத்திய அரசு நீக்கி வருகிறது. அதன்படி, கடந்த 2 நிதி ஆண்டுகளில் மட்டும் 1,27,952 நிறுவனங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிறுவன விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிறுவனவிவகாரத் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் கூறுகையில், “போலி நிறுவனங்களை அடையாளம் கண்டு முடக்குவதற்காக மத்திய அரசு 2021-ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, 2 நிதி ஆண்டுகள் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்