இந்தியா சிமென்ட்ஸ் லாபம் ரூ.133 கோடியாக உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: சென்னையைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நடப்பு 2022-23-ம் நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.133.29 கோடியை ஈட்டியுள்ளது. இது, இந்நிறுவனம் முந்தைய 2021-22-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம்ரூ.16.24 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

மத்திய பிரதேசத்தில் துணை நிறுவனமான ஸ்பிரிங்வே மைனிங் விற்பனை செய்யப்பட்டதையடுத்து மூன்றாவது காலாண்டில் லாபம் 7 மடங்கு உயர்ந்துள்ளது.

இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,160.3 கோடியிலிருந்து 10 சதவீதம் முன்னேற்றம் கண்டு ரூ.1,281 கோடியைத் தொட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சிமென்ட் மற்றும் கிளிங்கர் விற்பனை 21.08 லட்சம் டன்னிலிருந்து 3 சதவீதம் உயர்ந்து 21.82 லட்சம் டன் ஆனது.

செலவினங்கள் அதிகரித்து வருவதையடுத்து அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா சிமென்ட்ஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்