10 மாதங்களில் ரூ.54,733 கோடி - பயணிகள் பிரிவில் ரயில்வே வருவாய் 73% உயர்வு

By செய்திப்பிரிவு

புது டெல்லி: 2022 ஏப்ரல் முதல் ஜனவரி 2023 வரையில் பயணிகள் பிரிவில் ரயில்வேயின் மொத்த தோராயமான வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.31,634 கோடியாக இருந்தது.

முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் தோராயமான எண்ணிக்கை 6590 லட்சமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6181 லட்சமாக இருந்தது. இதில் 7% அதிகரிப்பைக் காட்டுகிறது.

2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஜனவரி 31 வரையிலான காலக்கட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் இருந்து ரூ.42,945 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.29,079 கோடியாக இருந்தது. இது 48% அதிகரிப்பைக் காட்டுகிறது.

முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில், பயணிகளின் தோராயமான எண்ணிக்கை 45,180 லட்சமாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 19,785 லட்சமாக இருந்தது, இது 128% அதிகரிப்பைக் காட்டுகிறது.

2022 ஏப்ரல் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் இருந்து கிடைத்த வருவாய் ரூ.11,788 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.2,555 கோடியாக இருந்தது, இது 361% அதிகரிப்பைக் காட்டுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்