சென்னை: சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.920 அதிகரித்து வியாழக்கிழமை ரூ.43,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.115 உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.44,000-ஐ நெருங்கும் எனத் தெரிகிறது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. புதன்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சுங்க வரி உயர்த்தப்படுவதால் ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.115 அதிகரித்து ரூ.5,475 ஆகவும், சவரனுக்கு ரூ.920 அதிகரித்து ரூ.43,800 ஆகவும் விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.968 அதிகரித்து ரூ.45,992-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் கிராமுக்கு ரூ.2.5 அதிகரித்து ரூ.77 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.2,500 அதிகரித்து ரூ.77,300 ஆகவும் விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago