புதுடெல்லி: அடுத்த நிதி ஆண்டில் விவசாயிகளுக்கான கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவகாய கடன்தொகை அதிகரிப்பு: 2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, விவசாயத் துறை மற்றும் கல்விக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். 2023-24 நிதி ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், கடந்த பட்ஜெட்டில் இது 18.5 லட்சம் கோடியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், விவசாயக் கடன் தொகை 8.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கடன் உயர்வு மூலம் வேளாண்மை மற்றும் விதை சார்ந்த தொழில் நிறுவனங்களும், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளம் ஆகிய தொழில்களில் ஈடுபடுபவர்களும் பலனடைவார்கள் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கேற்ப, இயற்கை உரங்களை வழங்கும் 10 ஆயிரம் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கல்வி வளர்ச்சி: நாட்டில் கடந்த 2014 முதல் புதிதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கானதாக இது இருக்கும். அவர்களுக்கு ஏற்ற தரமான புத்தகங்கள் இதில் வழங்கப்படும். பஞ்சாயத்து அளவில் நூலகங்களை அமைக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். அரசுசாரா நிறுவனங்களின் கூட்டுடன் இத்தகைய நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.O திட்டம் கொண்டுவரப்படும். இதில், ட்ரோன்கள், 3டி பிரிண்ட்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படும். நாடு முழுவதும் 30 ஸ்கில் இந்தியா இன்டர்நேஷ்னல் மையங்கள் உருவாக்கப்படும். அனைத்து திறன் மேம்பாட்டு மையங்களிலும் ஒரே மாதிரியான பயிற்சிகள் வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago