மும்பை: நாட்டில் புதிதாக 34 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிவேக இணையதள சேவையை வழங்கும் நோக்கில் நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகின்றன. இந்த சேவையை வழங்குவதற்கானப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜியோ செய்தித் தொடர்பாளர், ''உண்மையான 5ஜி சேவையை மேலும் 34 நகரங்களுக்கு விரிவுபடுத்தியதில் ரிலையன்ஸ் ஜியோ மகிழ்ச்சி அடைகிறது. இதன்மூலம் மொத்தம் 225 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
5ஜி சேவை தொடங்கப்பட்டு 4 மாதங்களில் நாங்கள் இந்த மிகப் பெரிய சாதனையை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய 8 நகரங்களில் புதிதாக 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 6 நகரங்கள், அசாமில் 3 நகரங்கள், பிஹாரில் 1 நகரம், சத்தீஸ்கரில் 2 நகரங்கள், ஹரியாணாவில் 2 நகரங்கள், கர்நாடகாவில் ஒரு நகரம், மகாராஷ்டிராவில் இரண்டு நகரங்கள் உள்பட மொத்தம் 34 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்கி உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago