பங்குச்சந்தை | சென்செக்ஸ் 235 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 113 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 60,912 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் சரிவடைந்து 18,119 ஆக இருந்தது.

நேற்றைய வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்திருந்த பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தைத் வீழ்ச்சியுடன் தொடங்கின.100 புள்ளிகள் வீழ்ச்சியுடன் தொடங்கிய சென்செக்ஸ் உடனடியாக 250 புள்ளிகள் சரிந்து 60,800 ஆக குறைந்தது. காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 235.99 புள்ளிகள் சரிந்து 60,809.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.05) புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,104.30 ஆக இருந்தது

உலகளாவிய சந்தைகளில் நிலவிய மந்தமான சூழ்நிலை, அமெரிக்க பொருளாதார தரவுகள் அதிகரித்திருக்கும் மந்தநிலை குறித்த அச்சம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. பெரும்பாலும் அனைத்துவகையான பங்குகளும் சரிவையே காட்டின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, விப்ரோ, டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்