புதுடெல்லி: உலகின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மின்வாகன பிரிவுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சுந்தரம் ஃபாஸனர்ஸ் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.2,061.75 கோடி (250 மில்லியன் டாலர்) ஆகும். சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகைக்கு மின்வாகன உதிரிபாக தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெறுவது இதுவே முதல் முறை. சுந்தரம் ஃபாஸனர்ஸ் தயாரித்து அளிக்கும் உதிரி பாகங்கள் எம்எச்இவி/பிஎச்இவி/பிஇவி உள்ளிட்ட பல்வேறு மின் வாகன மாடல்களிலும், நடுத்தர வகை டிரக், எஸ்யுவி, செடான்களிலும் பயன்படுத்திக் கொள்ளப்படும். இந்த உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட புதிய வாகனத்தை 2024-ல் வட அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. சென்னை செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சிட்டியில் அமைந்துள்ள பவர்டிரெய்ன் பிரிவுகளில் இந்த உதிரிபாகங்கள் தயாரிக்கப்படவுள்ளது.
ஸ்டேட்டர் ஷாஃப்ட் சப்-அசெம்பிளிகள், டிரைவ் கியர் சப்-அசெம்பிளிகளை 6 வருட காலத்துக்கு தயாரித்து அளிக்கும் வகையில் ரூ.200 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சுந்தரம் ஃபாஸனர்ஸ் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago