ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 33 மடங்கு உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரஷ்யாவிடம் இருந்து 33 மடங்கு அதிகமாக கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடுமை யான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை வாங்குவதை அந்த நாடுகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.

இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் மிகக் குறைந்த விலை யில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா விற்பனை செய்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண் ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எனினும், தற்போது ரஷ்யாவி டம் இருந்து சராசரியாக தினமும்120 கோடி பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 33 மடங்கு அதிகமாகும்.

இதே போல இராக்கிடம் இருந்து தினமும் 8.86 லட்சம் பேரல், சவுதியிடம் இருந்து தினமும் 7.48 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 mins ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்