சென்செக்ஸ் 168 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 168 புள்ளிகள் (0.28 சதவீதம்) சரிவடைந்து 60,092 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61 புள்ளிகள் (0.34 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,894 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் முன்றாவது வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:32 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 107.25 புள்ளிகள் உயர்வடைந்து 60,368.43 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.15 புள்ளிகள் உயர்வுடன் 17,958.75 ஆக இருந்தது.

உலகளாவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தில் தொடங்கின. வங்கிப் பங்குகளின் உதவியால் லாபத்தில் பயணித்த வர்த்தகம் மத்தியில் வீழ்ச்சியை நோக்கி சென்றது. மொத்த விற்பனையின் பணவீக்கம் குறித்த சாதகமான செய்திகள் வெளியாகி இருந்தும் வங்கி, நிதி, எண்ணெய் நிறுவனப் பங்குகளின் சரிவால் சந்தைகள் வீழ்ச்சியில் முடிவடைந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 168.21 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,092.97 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,894.85 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ஏசியன் பெயின்டஸ் பங்குகள் உயர்ந்திருந்தன. நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE