புதுடெல்லி: நாட்டில் மொத்த விலை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 4.95% ஆக குறைந்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாட்டில் மொத்த விலை பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 5.85% ஆக இருந்தது. இது கடந்த டிசம்பர் மாதம் 4.95% ஆகக் குறைந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 14.27% ஆக இருந்தது.
கடந்த டிசம்பரில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதற்கு முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் 1.25% குறைந்து காணப்பட்டது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் கடந்த டிசம்பரில் 18.09 ஆக இருந்தது. இதேபோல், கடந்த டிசம்பரில் தொழில்துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான பணவீக்கம் 3.37% ஆக இருந்தது.
தற்போது மொத்த விலை பணவீக்கம் குறைந்திருப்பதற்கு உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மின்சாரம், ஜவுளி, ரசாயனம் உள்ளிட்டவற்றின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
2 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago