சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளது அமுல் நிறுவனம்.
கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்த பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார். தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தார். ராகுல் மற்றும் கால பைரவா இந்த பாடலை பாடி இருந்தனர். சுமார் 3.36 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த பாடலில் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பீட்டுகள் அனல் பறக்கும் ரகமாக இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரும் நடனம் ஆடி இருப்பார்கள்.
இந்தச் சூழலில் இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்த கோல்டன் குளோப் விருதை கொண்டாடும் வகையில் இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆரின் உருவத்தை அமுல் நிறுவனத்தின் டிரேட்மார்க் சின்னமான அமுல் பேபிக்கு கொடுத்து விளம்பரம் செய்துள்ளது. அதோடு அதில் ‘Really Remarkable Reward’ என்றும் குறிப்பிட்டுள்ளது. அது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.
நடப்பு நிகழ்வுகளை வைத்து கார்டூன் வரைந்து, விளம்பரமாக வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது அந்த நிறுவனம். அதன் ஒரு பகுதியாக இது வெளியிடப்பட்டுள்ளது.
» வேலைக்கு சேர்ந்து 6 மாதங்களில் ஐஐடி பட்டதாரியை பணிநீக்கம் செய்த கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்
» சக் தே இந்தியா | ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ஷாருக்கான் வாழ்த்து
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago