ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கடந்த நவம்பர் மாதமே விரைவில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடைபெறும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் அமேசான் தனது ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அத்துடன் இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி கடந்த வாரம் ஒரு வலைப்பூ பதிவில், "உலகம் முழுவதும் அமேசான் அலுவலகங்களில் 18 ஆயிரம் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதிக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் பெங்களூரு, குருகிராம் அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை பாயும் என்றும் மனிதவள துறை, தொழில்நுட்பத் துறை என்று பல துறை ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் சராசரியாக 1000 என ஆரம்பித்து உலகம் முழுவதும் 18 ஆயிரம் அமேசான் ஊழியர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்படவுள்ளனர் என்றும் ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஏற்கெனவே வேலை இழந்த பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக லிங்க்டு இன் போன்ற பக்கங்களில் தாங்கள் வேலை இழந்துவிட்டதாகவும் தற்போது புதிய வேலைக்கு தயாராக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். வேலையிழந்தவர்களில் புதிதாக சேர்ந்தவர்கள் தொடங்கி பல ஆண்டுகள் அனுபவம் உள்ளோர் வரை பலரும் பணியிழந்துள்ளனர்.
5 மாத சம்பளம்; மருத்துவச் சலுகை: இதுவரை வேலையிழந்தவர்களுக்கு அமேசான் முறையாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கி அன்று நேரில் வந்து பணிநீக்கத்திற்கான விளக்கத்தை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஆரம்பித்து வைத்த எலான் மஸ்க் ஊழியர்களை ஒரே இரவில் ஒரே இமெயிலில் பணி நீக்கம் செய்த நிலையில் அமேசான் குறைந்தபட்சம் 5 மாத ஊதிய பலனையாவது அளிக்க முன்வந்துள்ளது மகிழ்ச்சி என்று சில ஊழியர்களும், தொழிலாளர் நலத்துறை நிபுணர்களும் கூறியுள்ளனர். ஊதிய பலனோடு, மருத்துவ சலுகைகளையும் 5 மாதங்களுக்கு வழங்க அமேசான் முன்வந்துள்ளது. ஆட்குறைப்பு மட்டுமல்லாது இனி குறிப்பிட்ட காலம் வரை முழு நேர பணிக்கு ஆள் எடுப்பதில்லை என்றும் அமேசான் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அண்மையில் ஆட்குறைப்பில் ஈடுபட்ட மெட்டாவும் இதுபோலவே இனி முழுநேரப் பணியாளர்களை அமர்த்துவதில்லை என்றும் 2023 முழுவதும் இது அமலில் இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago