புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கல் ஒன்று இருந்துள்ளது. அதை கவனித்த அந்தப் பயணி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அண்மையில்தான் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். கடந்த நவம்பரிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. இப்படியாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் ஏர் இந்தியா ஆளாகி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே இப்போது அந்த விமான நிறுவனம் வழங்கிய உணவில் கல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8-ம் தேதி சர்வப்ரியா சங்வான் என்பவர் டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு ஏர் இந்தியா விமானம் AI 215-ல் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு ஏர் இந்தியா சார்பில் வழங்கப்பட்ட உணவில் கல் இருந்துள்ளதை கவனித்துள்ளார்.
“கல் இல்லாத உணவை வழங்க உங்களுக்கு பணம் அவசியமில்லை ஏர் இந்தியா. நான் பயணித்த விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் எனக்கு கிடைத்தது. இது தொடர்பாக விமான குழுவினரிடம் தெரிவித்துள்ளேன். இது போன்ற அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
» பொங்கல் | வெளியூர்களுக்கு செல்ல சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
» எப்போதுமே அணிக்காக எனது திறனை 100% வெளிப்படுத்த விரும்புவேன்: கோலி
இதனை கவனித்த நெட்டிசன்கள் இந்தச் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago