மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 631 புள்ளிகள் (1.04 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 60,115 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 187 புள்ளிகள் (1.03 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,914 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 304.45 புள்ளிகள் சரிவடைந்து 60,442.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 81.40 புள்ளிகள் சரிந்து 18,019.80 ஆக இருந்தது. முந்தைய வாரத்தின் தொடர் சரிவுகளில் இருந்து திங்கள் கிழமை மீண்டிருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று மீண்டும் வீழ்ச்சியை சந்தித்தது.
உலகளாவிய சந்தைகளின் குழப்பமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்று வெளியான குறிப்புகள் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தங்களின் வர்த்தகத்தை வீழ்ச்சியில் நிறைவு செய்தன. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை சரிந்து 59,938 ஆக இருந்தது. நிஃப்டி 200 புள்ளிகள் வரை சரிந்து 17,856 வரை சென்றது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 631.83 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,115.48 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 187.05 புள்ளிகள் சரிவடைந்து 17,914.15 ஆக இருந்தது.
» பங்குச்சந்தை | சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவு
» 118 ஆண்டுகால வரலாற்றில் கடந்த 2022-ல் அதிக கார்களை விற்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சாதனை
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, எம் அண்ட் எம் பங்குகள் உயர்ந்திருந்தது. நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
10 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago