மேற்கு சசெக்ஸ்: 118 ஆண்டுகால வரலாற்றில் கடந்த 2022-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6,021 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். கடந்த 2005 முதல் இந்த நிறுவனத்தின் ஆண்டு வாரியான கார் விற்பனை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2005-ல் 796 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அது அப்படியே 2009-ல் ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டியது. பின்னர் 2010 முதல் கார் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2018-ல் மொத்தம் 4,107 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் கடந்த 2022-ல் இந்த எண்ணிக்கை 6,021 கார்களாக அதிகரித்துள்ளது. இதனை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கு அமெரிக்க நாட்டில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. அதே போல அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனா உள்ளது. மொத்தம் 5 மாடல் கார்களை தற்போது இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago