பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 637 புள்ளிகள்  சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 637 புள்ளிகள் (1.00 சதவீதம்) சரிவடைந்து 60,657 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 189 புள்ளிகள் (1.04 சதவீதம்) சரிந்து 18,042 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் மூன்றாவது நாள் வர்த்தகம் ஏற்றஇறக்கங்களின்றி தொடங்கிய போதிலும், விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 248.99 புள்ளிகள் சரிவுடன் 61,045.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.40 புள்ளிகள் சரிவடைந்து 18,174.15 ஆக இருந்தது.

சீனாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று எண்ணிக்கை, அமெரிக்க பெடரல் வங்கியின் சமீபத்திய கூட்டத்தின் முடிவகள் எவ்வாறு இருக்கும் போன்ற காரணங்கள் முதலீட்டாளர்களை வெகுவாக கவலை கொள்ளச்செய்தன. இதனால், இந்திய பங்குச்சந்தைகள் தங்களது இரண்டுநாள் லாபமான நிறைவை முடிவுக்கு கொண்டுவந்து கடும் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. அனைத்துப்பங்குகளுமே வீழ்ச்சியில் இருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 636.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,657.45 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 189.60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,042.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம், ஐடிசி, ஹெச்டிஎஃபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE