சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிந்து 61,045 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58 புள்ளிகள் சரிந்து 18,174 ஆக இருந்தது.

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 248.99 புள்ளிகள் சரிந்து 61,045.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.40 புள்ளிகள் சரிவடைந்து 18,174.15 ஆக இருந்தது.

உலக அளவில் நிலவும் பாதகமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் கொள்கை முடிவு கூட்டத்தின் செய்திகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கம் இல்லாமல் தொடங்கி, விரைவில் சரிவை நோக்கிச் சென்றன. அனைத்து பங்குகளும் வீழ்ச்சியையே காட்டின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, விப்ரோ, எம் அண்ட் எம் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் வீழ்ச்சியில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE