வர்த்தகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: உக்ரைன்-ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்தது. பின்னர், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த நான்கைந்து மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனினும், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.1,971-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரின் விலை மாற்றமின்றி, ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்