மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வார இறுதி மற்றும் ஆண்டின் இறுதி நாளில் சரிவுடன் நிறைவடைந்து. சென்செக்ஸ் 293 புள்ளிகள் சரிந்து 60,840 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 85 புள்ளிகள் சரிந்து 18,105 ஆக இருந்தது.
கடந்த வர்த்த நாளின் நீட்சியாக, வார இறுதி நாள் வார்த்தகம் முந்தைய ஏற்றத்தை இன்றும் தக்கவத்துக்கொண்டு தொடங்கியது. முற்பகல் 11:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.81 புள்ளிகள் உயர்வடைந்து 61,264.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42.30 புள்ளிகள் உயர்வடைந்து 18,233.30 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழலுக்கு மத்தியில் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் வர்த்த நேரத்தின்போது ஏற்ற இறக்கத்திலேயே பயணித்தது. பிந்தைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 60,744 வரைச் சென்று சற்று மீண்ட போதும் 2022-ஆம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளில் சரிவிலேயே நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 293.14 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,840.74 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 85.70 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,105.30 ஆக இருந்தது.
ஆண்டின் இறுதியை சரிவில் நிறைவு செய்த போதிலும் சென்செக்ஸ் இந்த வாரத்தில் 1.7 சதவீதம் உயர்வடைந்திருந்தது. 2022-ஆம் ஆண்டில் 4.4 சதவீதம் உயர்வுடனேயே முடிக்கிறது. அதேபோல் நிஃப்டி கடைசி வர்த்தக நாளில் 86 புள்ளிகள் வீழ்ந்திருந்த போதிலும், இந்த வாரத்தில் 1.7 சதவீதமும், ஆண்டில் 4.3 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago