பங்குச்சந்தை | சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு 

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வுடன் 61,264 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் உயர்வுடன் 18,233 ஆக இருந்தது.

வார இறுதி நாள் வார்த்தகம் நேற்றைய ஏற்றத்தை இன்றும் தக்கவைத்துக் கொண்டது. முற்பகல் 11:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.81 புள்ளிகள் உயர்வடைந்து 61,264.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42.30 புள்ளிகள் உயர்வடைந்து18,233.30 ஆக இருந்தது.

உலகலாளவிய சாதகமான சூழல் காரணமாக, வார இறுதி மற்றும் இந்த ஆண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று (டிச.30) இந்திய பங்குச்சந்தைகள் தங்களின் முந்தைய லாபத்தின் நீட்சியாக ஏற்றத்திலேயே தொடங்கின. அனைத்துத்துறை பங்குகளும் ஏற்றத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல்ஸ், ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன. ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்