ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி - சந்தா கோச்சாருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) சந்தா கோச்சார் பதவியில் இருந்தபோது வங்கி ஒழுங்கு முறை மற்றும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.1,875 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க அனுமதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ஆதாயமாக சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் தான் நடத்தி வந்தநியூபவர் ரினிவபிள்ஸ் நிறுவனத்தில் வேணு கோபால் தூத்தின் வீடியோகான் குழுமத்திடமிருந்து ரூ.64 கோடியை முதலீடாக பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடன் மோசடியில் சம்பந்தப்பட்ட சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர்ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஐந்து நாள் காவலில் வைத்துவிசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. புதன்கிழமையுடன் விசாரணைக்கான அனுமதி நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் அனைவரும் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, சந்தா கோச்சார் உள்ளிட்ட மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

3 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

மேலும்