பிப்ரவரியில் நாடு முழுவதும் மினிமம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் பரிசீலனை?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் பயனர்கள் தவறாமல் மாதந்தோறும் அந்த குறைந்தபட்ச கட்டணத்திற்கு அவசியம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கான கட்டணம் டெலிகாம் நிறுவனங்களை பொருத்து மாறுபடும்.

இந்தச் சூழலில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் அந்த குறைந்தபட்ச கட்டணத்தை நாடு முழுவதும் வரும் பிப்ரவரி மாதம் உயர்த்துவது தொடர்பாக பரிசீலித்து வருகிறதாம்.

இதற்கு முன்னோட்டமாக கடந்த நவம்பர் மாதம் ரூ.99 என இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.155 என ஹரியாணா மற்றும் ஒடிசா சர்க்கிளில் உயர்த்தி இருந்தது அந்நிறுவனம். இந்த புதிய ரீசார்ஜ் கட்டணத்தின் மூலம் பயனர்கள் அளவில்லா அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த இரண்டு பகுதிகளிலும் சோதனை ஓட்டம் தொடருவதாகவும். வரும் பிப்ரவரியில் இதன் சந்தை நிலவரம் மற்றும் பயனர்களின் மத்தியில் நிலவும் கருத்து சார்ந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் இதனை விரிவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் இடையே 5ஜி சேவையை விரிவு செய்வதிலும், அதனை பயனர்களுக்கு வழங்குவதிலும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

வணிகம்

20 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்