இந்தியப் பொருளாதாரம் – 2023: என்ன செய்தால் நன்மை சேரும்..?

By - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

உலகின் ஐந்தாவது வலிமையான பொருளாதாரமாக நாம் உயர்ந்து இருக்கிறோம். கரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பல நாடுகள், கடுமையானபொருளாதார நெருக்கடிகளை சந்தித்தன. இந்தியா, பெரிதாக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்துக் கொண்டது.

எதனையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்ட உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மூல சக்தியாக விளங்கும் – மரபுத் தொழில்கள்; ஊரடங்கால் பாதிக்கப்படாத கணினி சார்ந்த சேவைத்துறை, கடந்த 70 ஆண்டுகளில் பல்வேறு அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் – நமக்கு வெகுவாகக் கைகொடுத்தன.

இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவில் 81.3 கோடி பேருக்கு மாதந்தோறும் ஐந்து கிலோ அரிசி / கோதுமை இலவசமாக வழங்கும் ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’ திட்டம் உலக நாடுகளுக்கு முன் மாதிரியாக விளங்குகிறது.

பல அரசுகளும் ‘ஊதியச் சுமை’ குறைவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டு இருக்கும்போது, பத்து லட்சம் பேருக்கு அரசுப் பணி என்கிற அறிவிப்பு, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையைப் பறை சாற்றுகிறது. பொதுவாக விலைவாசி உயர்வு, அபாயகர எல்லைகளைத் தொடாமல் பார்த்துக் கொள்ளப் படுகிறது; பணவீக்க விகிதம் அநேகமாகக் கட்டுக்குள் இருக்கிறது. வணிக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. பத்திரப் பதிவு, வாகன சந்தை, கேளிக்கை நடவடிக்கைகள்.. ஏறத்தாழ வழக்கம் போல் நடைபெறுகின்றன. இவை எல்லாம் நல்ல செய்திகள்.

அப்படியானால், ‘எல்லாம் நன்றாக இருக்கிறது; ஒன்றே போல், எல்லாருக்கும் எதிர்காலம் ஒளிமய மாக இருக்கும்’ என்று மகிழ்ச்சி கொள்ளலாமா..? அப்படிச் சொல்கிற நிலையில் நாம் இல்லை; எந்த நாடுமே இல்லை. ஆதாயங்கள் நம்மிடம் கூடுதலாக இருக்கின்றன. அவ்வளவுதான். இதே நிலை நீடிக்குமா..? ஆதாயங்கள், வளருமா..? தேயுமா..?

இந்திய அரசு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. பல்வேறு துறைகளில் இன்னமும் தேக்க நிலை நீடிக்கவே செய்கிறது. கடந்த 25 நவம்பர் 2022 வரை, 1,22,01,448 சிறு குறுந்தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாய் குறு, சிறு தொழில் அமைச்சகம் தெரிவிக்கிறது. இவற்றில் குறுந்தொழில்கள் மட்டும்1,17,35,117 அதாவது 96.17%. இது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே. பதிவுசெய்யப்படாத நிறுவனங்களையும் கணக்கில் கொண்டால், மொத்தம் 6 கோடிக்கு மேலான சிறு குறுந்தொழில்கள் உள்ளன. (2021 அக்டோபரில் நகரங்களில் உள்ள ‘தெரு வணிகர்கள்’, சிறு குறுந்தொழில் கீழ் கொண்டுவரப்பட்டனர்.) சிறு குறுந்தொழில்கள் மூலம் சுமார் 11 கோடி பேருக்கு மேல் வாழ்வாதாரம் பெறுகிறார்கள். 2021-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27%, சிறு குறுந்தொழில்கள் மூலம் வந்தது.

இத்துறைக்கு நிதியாண்டு 2022-ல் மத்திய பட்ஜெட்டில் ரூ 15,700 கோடி ஒதுக்கப்பட்டது. (முந்தைய ஆண்டு – ரூ.7572 கோடி) சிறு குறுந்தொழில்களின் நிதித் தேவையுடன் ஒப்பிடும் போது, இந்த ஒதுக்கீடு மிக சொற்பம்.

கரோனா பெருந்தொற்று, ஊரடங்கு காரணமாக, சிறு குறுந் தொழில்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டன. போர்க்கால அடைப்படையில் ‘மீட்பு நடவடிக் கைகள்’ தேவைப்படுகின்றன.

‘சிறு குறுந்தொழில் சிறப்பு நிதியம்’ ஏற்படுத்தப் படலாம்; குறைந்த வட்டியில் நிதியுதவி கிடைப்பதை உறுதி செய்யலாம்; ஓரிரு ஆண்டுகளுக்கு வரி விலக்குஅளிக்கலாம்; சிறு குறுந்தொழில்களிடம் இருந்து அரசு பெறும் கொள்முதல் அதிகரிக்கப் படலாம்; கடன் மீதான வட்டி ரத்து செய்யப் படலாம்; சிறு குறுந்தொழில்களின் நிதித் தேவைகள், நெருக்கடிகளைக் கண்டறிந்து,உடனடியாக உதவுகிற வகையில், கணிசமான எண்ணிக்கையில் ‘கள அலுவலர்கள்’ நியமிக்கப்படலாம். சிறு குறுந்தொழில்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, நிலையான நீடித்த பொருளாதார வளர்ச்சி சாத்தியம்.

அடுத்து, 2023-ல் கல்வி - வேலைவாய்ப்பு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்