சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள் கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 60,000 நெருங்கியது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்வு அடைந்து 17,850 ஆக இருந்தது.

கடந்த வாரத்தில் கடுமையான வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள் இன்று சரிவில் இருந்து மீளத்தொடங்கியது . காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 441.05 புள்ளிகள் உயர்வடைந்து 60,286.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.20 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,880.00 ஆக இருந்தது.

கடந்த வாரத்தில் பங்குச்சந்தைகள் நான்கு நாட்கள் தொடர் சரிவை சந்தித்து வந்தன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 981 புள்ளிகள் சரிந்து 59,845 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 320 புள்ளிகள் சரிந்து 17,807 ஆகவும் இருந்தது. இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.8.42 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல் காரணமாக திங்கள்கிழமை வர்த்தகம் தனது முந்தைய சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்தில் பயணிக்கத் தொடங்கியன. பார்மா பங்குகளைத் தவிர அனைத்து வகை பங்குகளும் ஏற்றத்திலேயே இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், இன்டல்இன்ட் பேங்க், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, பவர் கிரீட் கார்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், டெக் மகேந்திர, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE